ஆப்நகரம்

தங்கம், சொந்த வீடு, கார்.. பெண்களின் விருப்பமான முதலீடு என்ன?

தங்கம் முதல் சொந்த வீடு வரை, பெண்களின் விருப்பமான முதலீடுகள் என்ன?

Samayam Tamil 8 Mar 2022, 6:23 pm
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெண்களுக்கு விருப்பமான முதலீடு, இளைஞர்களுக்கு விருப்பமான முதலீடுகள் குறித்து ZestMoney நிறுவனம் ஒரு சர்வே நடத்தியுள்ளது. இதில், பெண்களின் முதலீடு மற்றும் நிதி சார்ந்த முடிவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
Samayam Tamil gold


இந்த சர்வேயில், 59% பெண்கள் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். மேலும், 31% பேர் மியூச்சுவல் ஃபண்ட், பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ரெகரிங், டெபாசிட், ரியல் எஸ்டேட், கிரிப்டோகரன்சி ஆகியவற்றையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களை பொறுத்தவரை ரிஸ்க் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யவே அதிக பெண்கள் விரும்புகின்றனர். சர்வேயில் பங்கேற்றவர்களில் 93% பேர் முழு நேர வேலை அல்லது சுய வேலை செய்பவர்கள்.


இலக்கு சார்ந்த முதலீடுகளை செய்துள்ளதாக 0% பேர் தெரிவித்துள்ளனர். பெண்கள் மத்தியில் நிதி, முதலீடு சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இந்த சர்வே காட்டுகிறது.

பெண்கள் எதற்கு முன்னுரிமை வழங்குகிறார்கள் என்பதை பொறுத்தவரை சொந்த வீடு வாங்க 25% பேரும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு 23% பேரும், பணி ஓய்வு கால சேமிப்புக்கு 15% பேரும் முதலீடு செய்வதாக பதிலளித்துள்ளனர். கார் வாங்குவது, பயணம், திருமணம் ஆகியவற்றையும் மற்ற காரணங்களாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்