ஆப்நகரம்

மொத்த விலை பணவீக்கம் 1.62% உயர்வு

ஜூன் மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 1.62% அதிகரித்துள்ளது.

TNN 14 Jul 2016, 5:53 pm
ஜூன் மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 1.62% அதிகரித்துள்ளது.
Samayam Tamil wpi inflation rises to 1 62 in june
மொத்த விலை பணவீக்கம் 1.62% உயர்வு


மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. முந்தைய மே மாதத்தில் 0.79% ஆகக் காணப்பட்ட மொத்த விலை பணவீக்கம், தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வு காரணமாக, 1.62% என உயர்வடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், உணவுப்பொருட்கள் பணவீக்கம் 7.88% என்பதில் இருந்து, 8.18% என அதிகரித்துள்ளது. இதில், காய்கறிகள் விலை 16.91% ஆகவும், பழங்கள் விலை 5.97% ஆகவும் உயர்வடைந்துள்ளது. மேலும், உருளைக்கிழங்கு விலை 64.48 என்றும் அதீத வளர்ச்சி அடைந்துள்ளதே, பணவீக்கம் உயர முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்