ஆப்நகரம்

ஸ்மார்ட்போன் விலை திடீர் உயர்வு... வாடிக்கையாளர்கள் கவலை!

இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலையை க்ஷியோமி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 13 Nov 2021, 5:27 pm
சமீப காலமாகவே பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் க்ஷியோமி நிறுவனமும் இணைந்துள்ளது. தற்போது இரண்டு போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரெட்பி 9ஏ மற்றும் ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஆகிய போன்களின் விலைதான் இப்போது உயர்ந்துள்ளது.
Samayam Tamil redmi


புதிய விலை உயர்வின்படி, ரெட்மி 9ஏ போனின் விலை ரூ.7,299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 6,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ரெட்மி 9ஏ ஸ்போர்ட் போனின் விலை ரூ.7,999லிருந்து ரூ.8,299 ஆக உயர்ந்துள்ளது. இவற்றின் விலை 300 ரூபாய் அதிகரித்துள்ளது. கொரோனா பிரச்சினைக்குப் பிறகு நிறையப் பேருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்படுவது கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கெட்ட செய்தி! விலை அதிகம்!
சமீபத்தில்தான் ஸ்மார்ட்போன் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. மீடியாடெக் நிறுவனம் தனது சிப்செட்டின் விலையை 15 சதவீதம் வரை உயர்த்தியதாகவும், இதன் விளைவாக மீடியாடெக் சிப்செட் கொண்டு உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன்களின் விலையும் விரைவில் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியது. அடுத்து வரும் நாட்களில் மீடியா டெக் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

சிப்செட் பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தால் ஸ்மார்போன்களின் விலையும் உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்