ஆப்நகரம்

ஐடி ஊழியர்களுக்கு சம்பளமே உயரவில்லை.. ஆனால் உயர் பதவிகளுக்கு 90% சம்பள உயர்வு!

தொடக்கநிலை ஐடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக சம்பளமே உயரவில்லை என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Oct 2022, 5:44 pm
இந்திய ஐடி துறை ஏராளமான ஊழியர்கள், ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. ஆனால், தொடக்கநிலை ஐடி ஊழியர்களின் சம்பளம் 2010ஆம் ஆண்டுக்கு பின் உயரவில்லை அல்லது மிக குறைவாக மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil IT employees


2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய ஐடி ஊழியர்களுக்கான ஊதிய மாற்றங்கள் குறித்து Xpheno நிறுவனம் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2010ஆம் ஆண்டுக்கு பின் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கான சம்பளத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், இதே 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களின் CXO நிலை பதவிகளில் (CEO, CFO போன்ற உயர் பொறுப்புகள்) இருப்பவர்களின் சம்பளம் 90% உயர்ந்துள்ளதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால், ஐடி துறையில் இருக்கும் ஊதிய இடைவெளி மற்றும் ஊதிய வளர்ச்சி ஒரு விவாதப் பொருளாகியுள்ளது.

உங்களுக்கு PF வட்டி பணம் வரலையா? மத்திய அரசின் பதில் இதுதான்!
ஃப்ரஷர்கள் உள்ளிட்ட தொடக்கநிலை ஐடி ஊழியர்களுக்கு ஆண்டு வருமானம் 2010ஆம் ஆண்டுக்கு பின் 2020ஆம் ஆண்டு வரை சுமார் 5000 டாலராகவே இருப்பதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இந்திய ஐடி துறை ஊழியர்களில் 30% பேர் ஃப்ரஷர்கள்தான்.

இது ஒருபக்கம் இருக்க, 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருக்கும் சீனியர்களுக்கோ சம்பளம் 90% உயர்ந்துள்ளதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. பணவீக்கத்தை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமலேயே இருப்பது நியாயமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்