ஆப்நகரம்

10 லட்சம் பேர் வேலை இழப்பு - திருப்பூரில் வெடிக்கும் பிரச்சினை!

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையினர் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 10:36 am
கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வருகிறது. இந்த மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்துள்ளதால் இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருத்தி பதுக்குவதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Samayam Tamil திருப்பூர்


மேலும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்; நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மே 16) மற்றும் மே 17 ஆகிய இரண்டு நாட்களில் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

5 லட்சம் பேர் வேலை இழப்பு.. ரூ.800 கோடி நஷ்டம்!

இந்தப் போராட்டத்துக்கு கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திருப்பூரில் மட்டும் சுமார் 10,000 பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள. இதன் காரணமாக நாளொன்றுக்கு 350 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய வேலை நிறுத்தம் காரணமாக, விசைத்தறி மற்றும் அது சார்ந்த உப தொழில்களில் உள்ள சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்