ஆப்நகரம்

கிரெடிட் கார்டை பிளாக் செய்ய நான்கு வழிகள்!

உங்களது கிரெடிட் கார்டு தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ அதை உடனடியாக பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 6 Nov 2020, 8:33 pm
கிரெடிட் கார்டு இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு மிக அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பயனர்கள் தங்களது அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் பணம் செலுத்துவதற்கான பொதுவான முறைகளில் ஒன்றாக இப்போது கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன. ஆன்லைன் மூலமாகவும் நேரடி விற்பனையிலும் நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளன. ஒருவேளை உங்களிடம் இருக்கும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ என்ன செய்வது?
Samayam Tamil credit card


எஸ்பிஐ கிரெடிட் கார்டை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களது கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ அதை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். அதற்கு நான்கு வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

>> அழைப்பு சேவையின் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டை எளிதாக பிளாக் செய்யலாம். எஸ்டிடி எண்ணுடன் 39 02 02 02 என்ற எண்ணுக்கு அழைத்து கிரெடிட் கார்டை நீங்கள் பிளாக் செய்யலாம்.

>>எஸ் எம் எஸ் மூலம் பிளாக் செய்வதற்கு “BLOCK XXXX” என்று டைப் செய்து 5676791 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இங்கு XXXX என்பது உங்களது கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள்.

>> எஸ்பிஐ வெப்சைட் மூலம் பிளாக் செய்வதற்கு sbicard.com என்ற முகவரியில் சென்று 'Requests tab'என்ற பிரிவின் கீழ் 'Report Lost/Stolen Card' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது கார்டு நம்பரை கிளிக் செய்து பிளாக் செய்யலாம்.

>> மொபைல் ஆப் மூலம் பிளாக் செய்வதற்கு, எஸ்பிஐ ஆப்பில் 'menu' என்ற பிரிவின் கீழ் 'Service Request' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 'Report Lost/Stolen' என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களது கிரெடிட் கார்டு எண்ணை செலெக்ட் செய்து 'submit' கொடுக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்