ஆப்நகரம்

இவ்ளோ கம்மி வட்டியில் வீட்டுக் கடனா?

பண்டிகை சீசனை முன்னிட்டு மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Oct 2020, 6:07 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பெரும்பாலானோர் தங்களது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துவிட்டனர். வீடு, சொத்து, நகை போன்றவற்றுக்கு அதிகமாகச் செலவிடுவதை மக்கள் குறைத்துக்கொண்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பதற்காக வங்கிகளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதுவும் பண்டிகை சீசன் நெருங்கிவிட்டதால் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் போன்ற அறிவிப்புகளைப் பல்வேறு வங்கிகள் அறிவித்துள்ளன.
Samayam Tamil sbi home loan


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 லட்சத்துக்கு மேல் வீடு வாங்குபவர்களுக்கு 0.25 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கும். வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இச்சலுகை வழங்கப்படும் எனவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் யோனா செயலியில் இதற்கு விண்ணபிக்கலாம் எனவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி இதோ வந்துவிட்டது: சக்திகாந்த தாஸ்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பண்டிகைக்கால சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 0.10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே யோனோ செயலி மூலமாக விண்ணப்பித்தால் இன்னும் 0.5 சதவீதம் கூடுதல் சலுகை கிடைக்கும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீத வட்டியும், ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட கடனுக்கு 7 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன் மட்டுமல்லாமல், கார் கடன், நகைக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கான செயல்பாட்டுக் கட்டணத்தையும் ஸ்டேட் பேங்க் இந்தியா ரத்து செய்துள்ளது. கார் கடன் 7.5 சதவீத வட்டியிலும், நகைக் கடன் 7.5 சதவீத வட்டியிலும், தனிநபர் கடன் 9.6 சதவீத வட்டியிலும் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்