ஆப்நகரம்

கிரெடிட் கார்டு வலையில் விழாமல் இருக்க இதை செஞ்சிடுங்க!

கிரெடிட் கார்டு கடன் சுமை மட்டுமல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய மற்ற பிரச்சினைகளையும் தவிர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 7 Feb 2021, 7:29 pm
கிரெடிட் கார்டுகளால் மக்கள் செலவு செய்வது அதிகரித்திருக்கிறது. முதலில் பொருட்களை வாங்கிவிடுவது, பின்னர் பணத்தை செலுத்துவது என்பது அவசர தேவைகளுக்கும், திட்டமிட்ட தேவைகளுக்கும் உகந்தவை.
Samayam Tamil credit cards


எனினும், சில சமயங்களில் கிரெடிட் கார்டு கடன் சுமையில் சிக்கிக்கொள்ள கூடும். ஏனெனில், கிரெடிட் கார்டுகளுக்கு மிக அதிக வட்டி விதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டியது மிக அவசியம். அப்படி சரியாக செலுத்தாவிட்டால் என்னாகும்?

வீடு விலை குறையப்போகுது... அதிரடியாக வெளியான சூப்பர் நியூஸ்!
தாமத கட்டணம்

கிரெடிட் கார்டு கட்டணத்தை தாமதித்தால் தாமத கட்டணம் (late fees) வசூலிக்கப்படும். இதனால் உங்களுக்கு கூடுதல் தலைவலி வந்து சேரும்.

வட்டி உயர்வு

60 நாட்களுக்கு மேல் கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால் வட்டி உயர்த்தப்படும். இதனால் அபராத கட்டணமும் உயரும். விளைவாக கூடுதல் சுமை உங்கள் தலை மேல் வந்து விழும்.

வட்டியை உயர்த்திய கனரா வங்கி.. வாடிக்கையாளர்கள் ஹேப்பி!
கிரெடிட் ரிப்போர்ட்

30 நாட்களுக்கு மேல் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தாமல் இருந்தால் கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும். இந்த பதிவு 7 ஆண்டுகள் வரை இருக்கும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL score) அடி வாங்கும். வரும் காலத்தில் நீங்கள் வேறு ஏதேனும் கடன் வாங்கும்போது சம்பந்தம் இல்லாத பிரச்சினையாக எழும்.

ரிவார்ட் இழப்பு

கட்டணத்தை சரிவர செலுத்தாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் (rewards) கிடைக்காமல் போகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்