ஆப்நகரம்

பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா?

உங்களது பிஎஃப் சேமிப்புக் கணக்கு முதிர்வடையும் காலத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Samayam Tamil 8 May 2021, 9:23 pm
பொது சேமலாப நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, இதில் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பிஎஃப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
Samayam Tamil pf


தற்போதைய நிலையில், பிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு காலம் முடிந்தவுடன் உங்களுக்கு மூன்று ஆப்சன்கள் இருக்கிறது.

1. கணக்கை மூடலாம்!

உங்களுடைய பிஎஃப் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு அதை மூடிவிட்டு முழுத் தொகையையும் எடுக்கலாம். அப்போது நீங்கள் எடுக்கும் முழுத் தொகையும் வரி விலக்கு பெற்றிருக்கும். இந்தத் தொகை அனைத்தும் உங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இருப்பினும், இதைப் பெறுவதற்கு நீங்கள் உங்களது வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு ஒரு படிவத்தை கொடுக்க வேண்டும்.

2. கணக்கை நீட்டிக்கலாம்!

பிஎஃப் கணக்கின் முதிர்ச்சியில், உங்களுக்கு பணம் தேவையில்லை என்றாலோ அல்லது தொடர்ந்து சேமிக்க விரும்பினாலோ, நீங்கள் பிஎஃப் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இதற்காக, நீங்கள் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் புதிதாக முதலீட்டைத் தொடங்கலாம். முதிர்வு காலத்துக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இதற்கான படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த 5 ஆண்டுகளில் தேவைப்பட்டால் நீங்கள் பணத்தை எடுக்கலாம்.

3. காலத்தை நீட்டிக்கலாம்!

இந்த வசதியின் கீழ், பிஎஃப் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு அந்தக் கணக்கு மூடப்படாது. அதிலுள்ள பணம் அப்படியே இருக்கும். அதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது. நீங்கள் பணத்தை எடுக்க விரும்பவில்லை என்றாலோ அல்லது புதிதாக முதலீடு செய்ய விரும்பவில்லை என்றாலோ, மேலும் 5 ஆண்டுகளுக்கு உங்களது பிஎஃப் கணக்கை நீட்டிக்க முடியும். இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை. மேலும், எந்த காகித வேலைகளும் தேவையில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏற்கெனவே உள்ள உங்களது பிஎஃப் தொகைக்கு தொடர்ந்து வட்டி மட்டும் பெறுவீர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்