ஆப்நகரம்

காதி துறையில் பெருகும் வேலை.. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு!

பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் ஏற்படுத்தித் தர முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Apr 2023, 12:50 pm
ராஜஸ்தான் மாநிலத்துக்கு மூன்று நாள் பயணமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) தலைவர் மனோஜ் குமார் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அப்போது ஜெய்ப்பூரின் தாடியா கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் மூலமாக பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (PMEGP) தொடர்பான விரிவான தகவல்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Samayam Tamil khadi


ஜெய்ப்பூரில் நடைபெற்ற மற்றொரு பயிலரங்கில் உரையாற்றிய கே.வி.ஐ.சி. தலைவர் மனோஜ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்து ஊக்குவிப்போம்' என்ற தாரக மந்திரம் காதியை உள்ளூர் முதல் உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது என்றார். ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த அம்சமாக காதி மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதேசி இயக்கத்தில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறிய தொழில்களை நிறுவ முடியும் என அவர் கூறினார். இதன் மூலம் அதிக அளவிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை அவர்கள் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “காதி பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் ஊதியமும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை ஆகும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு காதி கைவினைக் கலைஞர்களின் ஊதியத்தை, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் 150 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தியிருப்பதாக மனோஜ் குமார் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு உள்ளேயே உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஊள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் காதி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைவினைக் கலைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார். பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பலமுறை காதி பொருட்களை வாங்குமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்