ஆப்நகரம்

உஷார்.. ஒரே காயினில் 36,000 கோடி ரூபாய் அபேஸ்!!

ஒன் காயின் (One Coin) என்ற கிரிப்டோ காயின் பெயரில் ஒருவர் 36,000 கோடி ரூபாயை போன்சி ஸ்கீம் மூலம் மோசடி செய்துள்ளார்.

Samayam Tamil 14 May 2022, 3:35 pm
கடந்த சில வருடங்களாகவே போன்சி ஸ்கீம் முறையில் கிரிப்டோ கரன்சியில் பல நபர்கள் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவாகி உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் ரூ.700 கோடி வரையிலான கிரிப்டோ மோசடிகள் நடந்துள்ளன. கிரிப்டோ மோசடிகளில் பிரபலமான கிரிப்டோ நிறுவனங்களும் தப்பவில்லை.
Samayam Tamil crypto scam


அதிலும் குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ ஹேக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு காயினின் பெயரில் தனிநபர் ஒருவர் போன்சி ஸ்கீம் மூலம் ரூ.36,000 கோடி வரையில் மோசடி செய்து தலைமறைவாகி உள்ளார் என்ற தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2017ஆம் ஆண்டில் ஒன் காயினின் (One Coin) நிறுவனரான ருஜா இக்னாடோவா என்பவர் முதலீட்டாளர்களிடமிருந்து 5 பில்லியின் டாலர் (தோராயமாக ரூ. 38,630 கோடி) பெற்றுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ரிவர்ஸ் கியரில் பிட்காயின்.. ஏமாற்றத்தில் முதலீட்டாளர்கள்!
தற்போது அவர் ஐரோப்பாவின் தேடப்படும் குற்றவாளிகளில் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாக இந்த ஒன் காயின் (One Coin) மோசடி உள்ளதாக பிபிசி தொலைக்காட்சி கூறியுள்ளது. அவரை "பிட்காயின் கொலையாளி" என்றும் விளம்பரப்படுத்தி உள்ளனர்.

அதன் அறிமுகத்திற்குப் பிறகு இக்னாடோவா 2017 இல் கிரீஸின் ஏதென்ஸுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு 175 வெவ்வேறு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து , One Coin மூலம் பணத்தைத் திரட்டி தலைமறைவாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்