ஆப்நகரம்

கிரிப்டோ கரன்சியை.. மொத்தமா தடை செய்யணும்.. கவர்னர் சக்தி காந்ததாஸ் அதிரடி!!

தனியார் கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் தடை செய்ய வேண்டியவை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் மீண்டும் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Jan 2023, 8:06 pm
இன்று நடைபெற்ற பிசினஸ் டுடே மற்றும் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் பேசினார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ். அப்போது அவரிடம் கிரிப்டோ கரன்சிகள் குறித்து கேள்விக்கு மீண்டும் எதிரான கருத்தையையே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil RBI vs Crypto


அவ்வுரையில் அவர் கூறியதாவது, தனியார் கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் ஆபத்தானவை, அதனால் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அவரின் எதிர்ப்பு கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை ஆதரிக்க வேண்டும் எனவும், தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்வது குறித்த ரிசர்வ் வங்கியின் கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

கிரிப்டோ கரன்சிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை, அதற்கு நிலையான் மதிப்பும் இல்லை, கிரிப்டோக்கள் 1005 ஊகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது, அதனால் அவை நம்புவதற்கான ஒரு இடம் இல்லை எனவும், அதற்உ எந்தவொரு அடிப்படை மதிப்பும் இல்லை, கிரிப்டோவை சிலர் சொத்துக்கள் எனவும், சிலர் நிதி தயாரிப்பு எனவும் கூறுகிறார்கள், ஆனால் கிரிப்டோக்களுக்கு மதிப்பே இல்லை என தாஸ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் அப்பட்டமாகச் சொல்லப்போனால் கிரிப்டோக் கரன்சிகள் ஒரு சூதாட்டம் என மிகக் கடுமையாக சாடியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்.

மேலும் அவர் இந்தியாவில் 20% கற்பனையான கிரிப்டோ வர்த்தகத்தை செய்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கிரிப்டோ மூலம் பயங்கரவாததிர்கு நிதி அளிப்பது, பணமோசடி செய்வது போன்ற அறியப்பட்ட ஆபத்துக்களைத்தவிர நன்மைகள் என்று எதுவுமில்லை எனவும் கூறியுள்ளார்.
Cyrpto ஒரு நிதி தயாரிப்பு அல்லது நிதி சொத்தாக மாறுவேடமிடுவது முற்றிலும் தவறான வாதமாகும். கிரிப்டோ சொத்துக்கள் என அழைக்கப்படுபவை பரிமாற்ற வழிமுறையாக மாறும் பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் அதில் பெரும்பாலானவை டாலர் மதிப்புடையவை.

மத்திய வங்கியால் வழங்கப்படாத கிரிப்டோவில் 20 சதவீத பரிவர்த்தனைகள் நடந்தால், பொருளாதாரத்தில் 20 சதவீத பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாட்டை ஆர்பிஐ இழக்கும். பணவியல் கொள்கையை தீர்மானிக்கும் மத்திய வங்கியின் திறன், பண விநியோகத்தின் அளவு ஆகியவை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும்.

இது பொருளாதாரத்தின் டாலர் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும், இது ஒன்றும் வெறும் கருத்து மட்டுமல்ல, இது நடக்கவும் சாத்தியமுண்டு என்றும் கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மத்திய வங்கி தயாரித்துள்ள சிபிடிசி (CBDC) கரன்சியை விரைவில் வெளியிடும் எனவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்