ஆப்நகரம்

ட்விட்டரில் வாய்க்காத் தகராறு.. மாற்றி மாற்றி சண்டையிட்ட கிரிப்டோ தலைவர்கள்!!

அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பிறகு WazirX மற்றும் Binance கிரிப்டோ நிறுவனங்களின் CEO க்கள் ட்விட்டரில் வாய்மொழிச் சண்டையில் ஈடுப்பட்டனர்.

Samayam Tamil 9 Aug 2022, 9:55 pm
சென்ற வாரம் இந்திய அமலாக்க இயக்குனரகம் (ED) கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான WazirX 350 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,785 கோடி) மதிப்பிலான பணத்தை மோசடி செய்ததற்காகக் கூறி அதன் நிறுவனர் மீது விசாரணையைத் தொடங்கியது.
Samayam Tamil Crypto Twitter


அதனையடுத்து Binance-ஐ கையகப்படுத்திய இந்திய கிரிப்டோ ஸ்டார்ட்அப்பின் சொத்துக்களை முடக்கியது. இது குறித்து பைனான்ஸின் தலைமைச் செயல் அதிகாரியான (Binance CEO) செங்பெங் ஜாவோ (Changpeng Zhao) இத்தகவலை ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சென்ற ஆண்டு வாசிர் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Zanmai Labs நிறுவனத்தின் பங்குகளை பைனான்ஸ் நிறுவனம் வாங்கியதாக கூறி விசாரணை நடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரியான ஜாவோ “எங்கள் நிறுவனம் WazirX கீழ் இயங்கும் Zanmai Labs நிறுவனத்தின் பங்குகளை வாங்கவில்லை என அதிரடியாக ட்விட் செய்துள்ளார்.



அந்த ட்விட்டை அடுத்து WazirX இன் இணை நிறுவனரான Nischal Shetty, ஜாவோவின் ட்வீட்டை மறுத்துள்ளார். மேலும் “WazirX ஐ பைனான்ஸால் வாங்கப்பட்டது. Zanmai Labs என்பது எனக்கும் எனது இணை நிறுவனர்களுக்கும் சொந்தமான ஒரு இந்திய நிறுவனமாகும் என ட்விட் செய்துள்ளார்.

மேலும் WazirX இல் INR-Crypto ஜோடிகளை இயக்குவதற்கு Zanmai Labs Binance நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்றுள்ளது. பைனான்ஸ் கிரிப்டோவை இயக்குகிறது எனவும் மேலும் கிரிப்டோ திரும்பப் பெறுவதைச் செயல்படுத்துகிறது என்றும் ட்விட் செய்துள்ளார்.

மேலும் இந்த ட்விட்டர் சண்டையில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பழி போட்டுக் கொண்டதில் ஒரு கட்டத்தில் பைனான்ஸின் தலைமைச் செயல் அதிகாரியான செங்பெங் ஜாவோ வாசிர் எக்ஸ் CEO இடம் கடுமையான வாய்ச் சண்டையில் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்