ஆப்நகரம்

பிட்காயின் வைத்து ஷாப்பிங் செய்ய முடியுமா?

கிரிப்டோ கரன்சிகள் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியுமா?

Samayam Tamil 17 Aug 2021, 5:40 pm

ஹைலைட்ஸ்:

  • பிட்காயின் வைத்து ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியுமா?
  • நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Bitcoin
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது. இளம் தலைமுறையினர் ஏராளமானோர் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஒருபுறம், முதலீடாக கிரிப்டோ கரன்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மறுபுறம், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மட்டும் போதுமா; கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியுமா என பலரிடம் சந்தேகங்கள் எழுகின்றன. ஏனெனில், அடிப்படையில் கிரிப்டோ கரன்சிகள் என்பவை டிஜிட்டல் நாணயங்கள்தான்.

உலகம் முழுவதும் ஏராளமான பெரு நிறுவனங்கள், பிராண்டுகள் முதல் சாதாரண லோக்கல் ஸ்டோர் வரை பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் மூலம் பரிவர்த்தனைகளை ஏற்கின்றன. இந்தியாவில் தற்போது சில நிறுவனங்கள் கிரிப்டோ பரிவர்த்தனையை ஏற்க தொடங்கியிருக்கின்றன.

ரூபாய் வைத்து பிட்காயின் வாங்க முடியுமா?
இந்தியாவில் ‘The Rug Republic' என்ற ஃபேஷன் பிராண்டு கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனைகளை அனுமதிப்பதாக தெரிவித்தது. இதேபோல, பல்வேறு நிறுவனங்கள் கிரிப்டோ பரிவர்த்தனையை ஏற்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஆன்லைனிலும் கிரிப்டோ கரன்சி மூலம் வவுச்சர்களை வாங்கி அதன் மூலம் பொருட்கள் அல்லது சேவையை வாங்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்