ஆப்நகரம்

ஏறுமுகத்தில் பிட்காயின்... இன்றைய கிரிப்டோ மார்க்கெட்!

இன்றைய சந்தையில் பிட்காயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 26 Jul 2021, 1:37 pm
உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோ கரன்சியான பிட்காயின் இன்று 12.57 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. காலை 7.30 நிலவரப்படி பிட்காயின் மதிப்பு 38,231 டாலராக இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் கிரிப்டோ கரன்சி சந்தையில் பிட்காயின் மதிப்பு 29,000 டாலருக்கு கீழ் வந்து அதிர்ச்சி அளித்தது. அதன்பின்னர் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.
Samayam Tamil bitcoin


பிட்காயின் - $ 38,231.54

பிட்காயின் போலவே எதெர், எக்ஸ்.ஆர்.பி., கார்டனோ, டோஜ்காயின் உள்ளிட்ட முன்னணி கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பும் இன்று வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் டெதர் நாணயத்தின் மதிப்பு இன்று குறைந்துள்ளது. டெதர் நாணயத்தின் மதிப்பு 0.01 சதவீதம் குறைந்து 1 டாலராக இருக்கிறது. போல்கடோட் நாணயத்தின் மதிப்பு 11.16 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோ கரன்சி விலை உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலீட்டாளர்களுக்கு இன்றும் மகிழ்ச்சியான செய்திதான். அடுத்து வரும் நாட்களிலும் இதே நிலை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்... ஒரே பிரீமியம்தான்!!

கிரிப்டோ கரன்சி மதிப்பு:


பிட்காயின் - $ 38,231.54
எதர் - $ 2,309.97
டோஜ்காயின் - $ 0.21
டெதர் - $ 1.00
பினான்ஸ் - $ 322.66
கார்டனோ - $ 1.32
எக்ஸ்.ஆர்.பி. - $ 0.65
யூ.எஸ்.டி. - $ 1.00

அடுத்த செய்தி

டிரெண்டிங்