ஆப்நகரம்

பிட்காயினுக்கு தனி இடம் ஒதுக்கிய மத்திய ஆப்பிரிக்க அரசு..வியப்பில் உலக நாடுகள்!!

பிட்காயினுக்கென ஒரு தனிப்பட்ட சட்டப்பூர்வமான ஹப்பை மத்திய ஆப்பிரிக்க அரசு உருவாக்கியுள்ளது.

Samayam Tamil 27 May 2022, 11:33 am
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) அரசாங்கம், நாட்டில் ‘சாங்கோ’ என்ற பிரத்தியேக கிரிப்டோ மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக மத்திய ஆப்பிரிக்க ஏற்றுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, பிட்காயினுக்கென பிரத்தியேக ஹப்பை செய்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2022-05-27 at 10.35.36 AM.


மத்திய ஆப்பிரிக்காவின் தலைவர் ஃபாஸ்டின் ஆர்சிஞ் (Faustin-Archange Touadéra) அவரின் ட்விட்டரில் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் சாங்கோ திட்டத்திற்குப் பங்களிக்க அல்லது அதன் காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்ய இணையதள முகவரியும் உள்ளது.

"BTC சட்டப்பூர்வமா டெண்டரை தேசிய சட்டமன்றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, முதல் உறுதியான முயற்சியை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றும் ஆப்பிரிக்காவின் தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



அரசாங்க ஆதரவுடன் கிரிப்டோ வாலாட்டுகள் மூலம் கிரிப்டோ வணிகங்கள் மற்றும் செயல்பாடுகளை நிலைநிறுத்துவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதப் போவதாகவும் ஃபாஸ்டின் கூறியுள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க மட்டுமின்றி எல் சால்விடோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளும் பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக அறிவிப்பதிலும் அதற்கான சட்டங்களை உருவாக்குவதிலும் முனைப்பாக இருக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்