ஆப்நகரம்

ஜோ பைடனுக்கு நன்றி - கிரிப்டோ உலகின் வாழ்த்து மழையில் அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக்க ஜோ படை உத்தரவு அளித்ததை அடுத்து கிரிப்டோ முதலீட்டாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

Samayam Tamil 14 Mar 2022, 11:04 am
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் மார்ச் 10 அன்று கிரிப்டோ சொத்துக்கள் மீதான நிர்வாக உத்தரவில் கையொப்பமிட்ட பிறகு கிரிப்டோ ஆதரவாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார்.
Samayam Tamil Joe Biden


டிஜிட்டல் சொத்துக்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உத்தரவு, அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் அவற்றின் அடிப்படை தொழில்நுட்பத்தின் சாத்தியமான நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும் முதன்முறையாக, முழு அரசாங்க அணுகுமுறையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அவர் கையெழுத்திட்ட அதே நாளில் வெள்ளை மாளிகையால் அந்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஜோ பைடனின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து அவரின் இந்த் கிரிப்டோ நிர்வாக உத்தரவுக்கு ஆதரவைக் காட்டி அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

ஷிபா இனுவை மறந்துறுங்க.. இப்போ இந்த காயின்கள்தான் டாப்!
அமெரிக்காவின் பிளாக்செயின் அசோசியேஷனும் அதில் உள்ள 80 உறுப்பினர்களின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதுடன், "இந்த அணுகுமுறையை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் தொழில்துறை சார்பாக ஏஜென்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ படனின் இந்த உத்தரவை அடுத்து கிரிப்டோ முதலீட்டாளர்கள் அமெரிக்கா லாடர்களுடன் கிரிப்டோகரன்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த முக்கிய கிரிப்டோ நிறுவனங்கள் மற்றும் நிதி அலோசகர்களும் பைடனின் உத்தரவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்