ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி மோசடி.. ரூ.4 கோடி அபேஸ்.. போலீஸ் தீவிர விசாரணை!

டெல்லியில் கிரிப்டோகரன்சியின் பெயரில் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக டெல்லி காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2022, 9:56 pm
2019 ஆம் ஆண்டு, டெல்லியின் பாஸ்கிம் விஹாரியில் உள்ள காவல் நிலையத்தில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் தனது கிரிப்டோகரன்சிகளை சட்ட விரோதமாக வேறொரு நபரின் வாலட்டிற்கு மாற்றியதாகக் கூறி புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil crypto crime


அதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையின் சிறப்பு சைபர் கிரைம் பிரிவு, புகார் அளித்த தொழிலதிபரின் கிரிப்டோ வாலட்டிலிருந்து, பாலஸ்தீன அமைப்பான ஹமாஸின் இராணுவப் பிரிவின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் வாலட்டிற்கு மாற்றியதாகக் கூறப்படும் மோசடி கும்பலைக் கைது செய்ததாகக் கூறுகிறது. அதில் பிட்காயின், எதிரியம் மற்றும் பல கிரிப்டோகரன்சிகள் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் தற்போதைய மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். விசாரணையில், 6.7 பிட்காயின்கள், 9.79 எதிரியம் மற்றும் 2.44 பிட்காயின் கேஷ் காயின்கள் மூன்று கணக்குகளுக்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பிட்காயின்கள் 'அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ்' என்ற முகவரியுடன் கூடிய வாலட் உட்பட ஆறு கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

Cryptocurrency: வேகம் காட்டும் ஸ்கார் டோக்கன் - 600% உயர்வு!
டெல்லி காவல்துறை இதுவரை நடத்திய விசாரணையில், பிட்காயின்கள் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் தொழிலதிபரின் பணப்பையில் இருந்து மோசடியாளர்களால் திருட்டுத்தனமாக மாற்றப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

போலீஸ் டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா, “கிரிப்டோகரன்சிகள் பல்வேறு வாலட்டுகள் வழியாக சந்தேகத்திற்குரிய வாலட்டுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு வாலட் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்த பயங்கரவாதத்திற்கு எதிரான நிதியுதவிக்காக இஸ்ரேலிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்