ஆப்நகரம்

பிட்காயின் முதலீட்டாளர்கள் தலையில் விழுந்த இடி...15,000 டாலருக்குக் கீழ் குறையும் அபாயம்!!

பிட்காயின் இன்னும் சில நாட்களில் 15,000 டாலருக்குக் கீழ் செல்லும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.

Samayam Tamil 4 Jul 2022, 3:01 pm
வாரத்தின் முதல் நாளான இன்று கிரிப்டோ கரன்சி மார்க்கெட் சற்று சரிவுடனே ஆரம்பித்தாலும், பிட்காயின் 0.37 சதவீதமாகச் சற்று உயர்வை அடைந்துள்ளது. இது ஒரு பெரிய உயர்வு இல்லையென்றாலும் பிட்காயின் இனி படிப்படியாக உயரக் கூடும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
Samayam Tamil WhatsApp Image 2022-07-04 at 2.21.13 PM.


ஆனால் அதுதான் இல்லை. இனி வரும் காலங்களில் பிட்காயின் தொடர்ந்து சரியும் எனவும் ஒரு பிட்காயினின் விலையானது 15,000 டாலருக்கும் கீழ் குறையும் எனவும் முட்ரெக்ஸ் கிரிப்டோ வர்த்தக பரிமாற்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் (Co-Founder) மற்றும் தலைமை செயல் அதிகாரியான (CEO) எடுல் பட்டேல் (Edul Patel) கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சட்ட கட்டுப்பாடுகள், அதிகப்படியான வரிகள், மத்திய வங்கியின் ஆதரவின்மை, 50% மேலான பொருளாதார அறிஞர்களின் எதிர்ப்பு, பண வீக்கம், போர் பதற்றங்கள், விலைவாசி உயர்வுகள் போன்ற முக்கிய காரணங்களினால் பிட்காயினின் விலையானது தொடர் சரிவைச் சந்திக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த தெளிவான கருத்தினைத் தொடர்ந்து பிட்காயின் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனாலும் இன்றுள்ள காலகட்டத்தில் அவற்றை விற்காமல் ஹோல்ட் செய்வதுதான் புத்திசாலித்தனமான ஒரு முடிவாக இருக்கும் எனவும் அவர் பிட்காயின் முதலீட்டாளர்களுக்குக் கூறியுள்ளார்.

Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்