ஆப்நகரம்

கிரிப்டோகரன்சிக்கு தடை இல்லை: வெளியான ரகசிய தகவல்!

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிப்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Dec 2021, 1:37 pm
கிரிப்டோகரன்சி மசோதா அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான அறிவிப்பில் தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படாது; மாறாக அவற்றை ஒழுங்குபடுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட கிரிப்டோகரன்சி மசோதா குறிப்பில் தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்வதற்கு பதிலாக அவற்றை ஒழுங்குபடுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil crypto


இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கப்படாது என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அக்குறிப்பின்படி, கிரிப்டோகரன்சிகள் “கிரிப்டோ அசெட்” என வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான ஆதாரங்கள் கூறுகின்றன. கிரிப்டோ அசெட்களை தற்போதுள்ள கிரிப்டோ பரிவர்த்தனை தளங்களே கையாளும். அவற்றின் நடவடிக்கைகளை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கட்டுப்படுத்தும்.

கிரிப்டோ அசெட்களில் முதலீடு செய்ய கிரிப்டோ தளங்களுக்கு ஒரு ’கட் ஆஃப்’ தேதி அறிவிக்கப்படும். அவை சந்தைக் கட்டுப்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் எனவும் ஆதாரங்கள் கூறுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட மெய்நிகர் நாணயம் (அ) டிஜிட்டல் கரன்சி மசோதாவுடன் இணைக்கப்படவில்லை. இருப்பினும் கிரிப்டோகரன்சி சம்பந்தமான சிக்கல்களை மத்திய வங்கி கட்டுப்படுத்தி அவற்றை மேற்பார்வையிடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


கிரிப்டோ அசெட்களில் ரூ.5 கோடி முதல் ரூ.20 கோடி வரை முதலீடு செய்பவர்களுக்கு கிரிப்டோ ஒழுங்குமுறை அதிகாரியால் அபராதங்கள் விதிக்கப்படும். மேலும் பரிமாற்ற விதிகளை மீறுபவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் வரை குற்றவியல் தண்டனையுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கிரிப்டோ சொத்துகள் மூலம் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்