ஆப்நகரம்

பிரேக் போடாமல் ஏறிய ஷிபா இனு விலை.. 23,000 டாலரைத் தொட்ட பிட்காயின்!!

இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.

Samayam Tamil 4 Feb 2023, 12:50 pm
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கிரிப்டோ கரன்சிகள் விலை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் ஈட்டப்படு லாபத்தில் 30% வரியாக பிடிக்கப்படும் எனவும், 1% டிடிஎஸ் கழிக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதனையடுத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகம் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் கடுமையான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil bitcoin rate


இதற்கிடையில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி எனும் CBDC நாணயத்தை பைலட் முறையில் சோதித்து வரும் நிலையில், அதை அமல்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கிரிப்டோ மார்க்கெட்டில் முதன்மை காயினான பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களும் 0.21% உயர்வுடன் காணப்படுகின்றன.

கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் 0.16 சதவீதம், எதிரியம் 0.31 சதவீதமும், பைனான்ஸ் 1.34 சதவீதமும் உயர்வுடனும் காணப்படுகிறது. அனைத்து முன்னணி ஆல்ட்காயின்களும் விலை இறக்கம் கண்டுள்ளன.

இன்று முன்னணி ஆல்ட்காயின்களான ஷிபா இனு 11.85 சதவீதம், சொலானா 0.34 சதவீதமும், அவலாஞ்சி 0.22 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பி காயின் 0.19 சதவீதம், கர்டானோ 0.76 சதவீதம், போல்க்கா டாட் 0.55 சதவீதமும், பாலிகான் 0.19 சதவீதமும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

அதே சமயம், டிரான் காயின் 0.27 சதவீதமும், லைட்காயின் 0.20 சதவீதமும், டோஜ்காயின் 1.89 சதவீதமும் உயர்வுடனும் உள்ளன.

காயின்மார்கெட் கேப் நிலவரப்படி இன்றைய டாப் 10 காயின்களின் விலை நிலவரம் என்ன என்று கீழே பார்க்கலாம்:

பிட்காயின் – 23,352.83 டாலர் (0.22%)

எதிரியம் – 1,655.62 டாலர் (0.81%)

பைனான்ஸ் – 328.24 டாலர் (1.62%)

சொலானா – 24.49 டாலர் (0.49%)

கர்டானோ – 0.4009 டாலர் (0.26%)

டோஜ் காயின் – 0.09354 டாலர் (2.00%)

எக்ஸ்.ஆர்.பி – 0.4091 டாலர் (0.17%)

பாலிகான்– 1.23 டாலர் (4.02%)

போல்க்கா டாட் – 6.89 டாலர் (2.89%)

ஷிபா இனு – 0.0000001389 டாலர் (11.90%)

Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்