ஆப்நகரம்

கிரிப்டோ வரி விதிப்பும் – வாசிர் எக்ஸின் கொதிப்பும்!! புதுமையை தடுக்கும் அரசு!

கிரிப்டோகரன்சி உக்கப்படுத்தாதது – புதுமையை ஊக்கப்படித்தாதற்குச் சமம் – என வாசிர் எக்ஸ் இன் இணை நிறுவனரான நிக்சல் ஷெட்டி ஆதங்கம்.

Samayam Tamil 23 Mar 2022, 8:23 am
கிரிப்டோகரன்சி வரிவிதிப்புக்கான அரசின் ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அரசு கிரிப்டோகரன்சிகள் மீது மட்டும் அதிகப்படியான வரிகளை விதித்து கிரிப்டோகரன்சியை மறைமுகமாக நிராகரிப்பதாக கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளங்களின் நிறுவனர்கள் கூறுகின்றனர்.
Samayam Tamil wazir x


விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதால் ஏற்படும் இழப்புகளை மற்றொருவரிடமிருந்து வரும் ஆதாயங்களுக்கு எதிராக அமைக்க முடியாது என்றும் கிரிப்டோ மைனிங் செலவுகளை வரி விலக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது என்றும் மார்ச் 21 அன்று மத்திய அரசு கூறியது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிரிப்டோ மார்கெட்டில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கிரிப்டோ ஆதரவாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

வாசிர் எக்ஸின் (WazirX) கிரிப்டோ தளத்தின் இணை நிறுவனரனா நிக்சல் ஷெட்டி (Nishcal Shetty) ”கிரிப்டோகரன்சி உக்கப்படுத்தாதது – புதுமையை ஊக்கப்படித்தாதற்குச் சமம்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் காயின் ஸ்விட்ச் (CoinSwitch) கிரிப்டோ தளத்தின் இணை நிறுவனரான ஆஷிஷ் சிங்கால் (Ashish Singhal) கிரிப்டோவின் நஷ்டங்களை ஈடுசெய்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், KYC குறித்த புகார்களுக்கு கிரிப்டோ நிறுவனங்கள் உள்ளாகும் எனவும் அதனால் பயனாளர்கள் கிரே மார்கெட்டை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிட் பிஎன்எஸ் (Bitbns) கிரிப்டோ தளத்தின் நிறுவரான கௌரவ் தாஹேக் (Gaurav Dahake) தற்போதுள்ள சூழலில் கிரிப்டோ வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளால் கிரிப்டோ மார்கெட்டின் வளர்ச்சியானது 30% முதம் 40% வரை குறையும் எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்