ஆப்நகரம்

கிரிப்டோகரன்சிக்கு ஸ்பெஷல் இடம் – துபாய் அதிரடி அறிவிப்பு!

துபாயில் உள்ள துபாய் உலக வர்த்தக மையம் பொருளாதாரத்தில் கிரிப்டோவிற்கு சிறப்பு இடம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Dec 2021, 7:32 pm
வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சி மற்றும் பிற டிஜிட்டல் வடிவிலான சொத்துக்களை துபாய் பொருளாதரத்தில் ஒரு பகுதியாக சேர்க்க துபாய் உலக வர்த்தக மையம் (The Dubai World Trade Centre - DWTC) திட்டமிட்டு வருகிறது. மேலும் கிரிப்டோகரன்சி குறித்து பல ஆராய்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்பை துபாய் ஊடக அலுவலகம் டிசம்பர் 20 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Samayam Tamil cryptocurrency - dubai


வளர்ந்து வரும் இந்த நவீன தொழில்நுட்ப உலகில், உலக பொருளாதாரத்தை சூடு பிடிக்க வைக்க கிரிப்டோகரன்சி போன்ற புதிய வணிகத்தை பொருளாதாரத்தில் ஈடுபடுத்தினால் அது உலக அளவில் மற்ற நாடுகளுடனான வணிகத்தை ஈர்க்கும் புது முயற்சியாக இந்த வணிக யுக்தி இருக்கும் என துபாய் உலக வர்த்தக மையம் கூறியுள்ளது.

கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் சொத்துக்களைத் தயாரிக்கவும், இயக்குவதற்கும் மற்றும் பரிவர்த்தனை செய்யவும் கிரிப்டோவிற்கென தனிப் பிரிவை அமைக்கவும், அதன் மூலம் புதிய பொருளாதாரத் துறைகளை உருவாக்கவும் துபாய் உலக வர்த்தக மையம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கூட்டமைப்பில் உள்ள முக்கிய ஏழு எமிரேட்டர்ஸின் அமைப்புகள் உந்துதலாக இருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்.. 5000% உயர்ந்த சில்வா காயின்!
மேலும் அந்த அறிக்கையில் “முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, பண மோசடி எதிர்ப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்கு எதிராக போராடுதல், அனைத்து நாடுகளுடான நட்புறவை மேம்படுத்துதல், எல்லைத் தாண்டிய ஒப்பந்தங்களின் நடவடிக்கைகளை கண்டறிதல் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் கடுமையான தரநிலைகள் உருவாக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில், UAE செக்யூரிட்டிஸ் அண்ட் கமாடிட்டிஸ் ஆணையம் மற்றும் துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டர் ஆணையம் (DWTCA) ஆகியவை DWTCA கிரிப்டோகரன்சி சொத்துக்கள் தொடர்பான நிதி நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் உரிமம் வழங்கவும், கிரிப்டோகரன்சிகளை அனுமதிப்பது உட்பட அனைத்திற்குமான ஒரு கட்டமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன. துபாயின் இந்த அதிரடி முடிவால் உலக நாடுகளும் சற்று வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்