ஆப்நகரம்

ஆரம்பமே அமர்க்களம்... அதிரடி காட்டிய சிங்காரி டோக்கன்!

சிங்காரி ஆப் அறிமுகம் செய்த புதிய கிரிப்டோ காயின் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Nov 2021, 8:49 pm
இந்தியாவின் ஷார்ட் வீடியோ ஆப்பான சிங்காரி தனது முதல் கிரிப்டோ டோக்கனான GARI-யை சென்ற மாதம் வெளியிட்டது. அதன்பின் GARI டோக்கன் நேற்றைய தினம் ரிபப்ளிக் கிரிப்டோ பிளாட்ஃபார்மில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் 40 மில்லியன் டாலர் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிங்காரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil crypto


GARI டோக்கன் சொலானா பிளாக்செயின் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சொலானா பிளாக்செயின் வளர்ந்துவரும் ஒரு முக்கிய கிரிப்டோ பிளாக்செயின்களில் ஒன்றாகும். அவை மக்கள் உபயோகிக்க எளிதாகவும், அதிக லாபம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டதாகவும் Chingari நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிறுவனம் அதன் கிரிப்டோ வர்த்தக வளர்ச்சிக்காக கடந்த செப்டம்பரில் 30க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.1.9 கோடிக்கு அதிகமாக நிதி திரட்டியது.

கிரிப்டோவில் பணம் போட்டவர்கள் ஷாக்! “இவ்வளவு நாளா களவாணிப் பய சகவாசமா வச்சிருந்தோம்”
கடந்த வருடம் டிக்டாக் ஆப்புக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது சிங்காரி ஆப்புக்கும் தடை விதித்தனர். பின்னர் தடை நீக்கப்பட்டு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அந்நிறுவனம் வளர்ந்து வரும் கிரிப்டோ வர்த்தகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 2021 செப்டம்பரில் GARI கிரிப்டோ டோக்கனை அறிமுகப்படுத்தியது. அதன் விளம்பரத் தூதராக பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்