ஆப்நகரம்

இந்திய கிரிப்டோ யூடியூப் சேனல்கள் முடக்கம் - ஹேக்கர்கள் கைவரிசை!

பிரபல இந்திய கிரிப்டோகரன்சி யூடியூப் சேனல்களை ஹேக் செய்த ஹேக்கர்கள்.

Samayam Tamil 25 Jan 2022, 8:32 pm
உலகெங்கிலும் வளர்ந்து வரும் கிரிப்டோ துறையை குறிவைத்து ஹேக்கர்கள் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில், கிரிப்டோவிற்கு ஆதரவாக இருக்கும் யூடியூபர்கள் மற்றும் CoinDCX, WazirX மற்றும் Unocoin போன்ற இந்திய நிறுவனங்களுக்கு சொந்தமான பல YouTube சேனல்களை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
Samayam Tamil Youtube channel hack


அந்த சேனல்கள் மூலம் ஹேக்கர்கள், தாங்கள் சொல்லும் கிரிப்டோ வாலட்டுகள் மூலம் பணத்தை செலுத்துமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர்கள் சொல்லும் வழிமுறைகளின்படி பணத்தை இணைக்குமாறும் கூறியுள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட யூடியூப் சேனல்களின் மூலம் எதிரியம், யூஎஸ்டி காயின் மற்றும் பைனான்ஸ்க்கு இணையான காயின் எனக் கூறி அறிமுகமில்லாத OWCY எனும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுமாறு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் அந்த சேனல்களை நடத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுகளுக்கு அதற்குப் பிறகுதான் ஹேக் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

கிரிப்டோகரன்சி: முக்கிய உத்தரவை வெளியிடும் அமெரிக்கா!
அதனைத் தொடர்ந்து அந்த விடியோக்களை ஹேக்கர்கள் நீக்கி விட்டதையும் கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இந்திய யூடியூபரான அருண் மைனி ட்வீட் செய்தபோது, அவரைப் பின்தொடர்பவர்களில் யாராவது அந்த ஹேக்கர்களின் வீடியோ செய்தியை திரையில் பதிவு செய்திருந்தால், அதைப் பகிருமாறு கேட்டுள்ளார். மேலும் அந்த விடியோவைப் பின்பற்றி யாரேனும் அந்த கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தால் உடனடியாக அவற்றை கவனித்து சரியான முடிவெடுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே சமயம், பிரபல இந்திய கிரிப்டோகரன்சி இயங்குதள நிறுவனங்களான Unocoin மற்றும் WazirX தங்கள் சேனல்கள் ஹேக் செய்யப்பட்தையும், அவை உடனடியாக கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்