ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!

பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும்படி கிரிப்டோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

Samayam Tamil 1 Dec 2021, 3:38 pm
தனியார் விரிச்சுவல் கரன்சிகளை தடை செய்வது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட அனைத்து வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் அரசிற்கு எந்தவித ஒளிவு மறைவும் இன்றி சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil BTC


வெளிப்படைத்தன்மை கருதி நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து கிரிப்டோகரன்சி நிறுவனங்களும் வெளியிடுமாறு இரண்டு வெவ்வேறு பொருளாதார அமைச்சகங்களில் பணிபுரியும் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய உள்ளதாக வெளியான தகவல்களும், அரசாங்கத்தின் இந்த உத்தரவும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், மசோத நிறைவேற்றப்பட்டப் பிறகு இந்த உத்தரவு சரியான முறையில் திருத்தப்படும் எனவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் பேங்க்லெஸ் டிஏஓ காயின்!
அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் மற்றும் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா, 2021இன் படி “இந்திய அரசு ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான எளிதான கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய முயல்கிறது, இருப்பினும், கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளையும் அரசு அனுமதிக்கிறது,” என்று கடந்த வாரம் மக்களவையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கிரிப்டோகரன்சிகள் கட்டுப்பாடற்றவையாக கருதப்படுவதால், கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவங்கள் அவர்களின் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான அனைத்து முதலீடுகள் மற்றும் வியாபாரங்கள் குறித்த விவரங்களையும் அரசுக்கு சமர்பிக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் ஏற்பட்ட வரி ஏய்ப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடுருவல்கள் மற்றும் வரி விதிப்புகள் குறித்து அரசுக்கு தெளிவான முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்