ஆப்நகரம்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி: மசோதாவில் புதிய அப்டேட்!

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆராய செபி, ரிசர்வ் வங்கி மற்றும் வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படும் என கிரிப்டோ மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2021, 2:17 pm
புதிய கிரிப்டோகரன்சி மசோதாவில், கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனங்கள் அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற ‘வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளும்’(KYC) தரவுகளை ஆராய, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (Sebi) மற்றும் வரித்துறை கட்டுப்பாட்டாளர்கள் உட்பட குறிப்பிட்ட அரசு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil crypto


கிரிப்டோகரன்சியின் அதீத வளர்ச்சியை அறிந்த இந்திய அரசு புதிய கிரிப்டோ விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் KYC தரவுகளை வாடிக்கையாளர்கள் கட்டாயம் பகிர வேண்டும் எனவும், முதலீட்டாளர்களின் விவரங்களும் பகிரப்பட வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கிரிப்டோகரன்சி: சிறைத்தண்டனை அல்லது ரூ.20 கோடி அபராதம் - மோடி அரசின் திட்டம்!
தற்போதுள்ள கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்கள் வெவ்வேறு KYC தரவுகளைக் கொண்டுள்ளன. புதிய கிரிப்டோ மசோதாவில் ஒரே மாதிரியான KYC தரவுகளை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும்படி விதிமுறைகள் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, “இந்தியாவில் வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சிக்காக அரசு சீரான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என BuyUcoin நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சிவம் தகரால் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்