ஆப்நகரம்

இனி பிட்காயின் மூலம் விமான டிக்கெட் வாங்கலாம்!

பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் வைத்து விமான டிக்கெட் வாங்க அனுமதி.

Samayam Tamil 14 Oct 2021, 4:34 pm
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ள மைக்கேடியா (Maiquetía) மாகாணத்தில் உள்ள தி சைமன் பொலிவர் இண்டர்நேசனல் ஏர்போர்ட்டுக்கு (The Simón Bolívar International Airport) வரும் பயணிகள் பிட்காயின் (Bitcoin), டேஷ் (Dash), பெட்ரோ (Petro) போன்ற கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தி விமான டிக்கெட்டை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Flight


சமீபத்தில் எல் சால்வடோர் நாட்டில் பிட்காயினை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, தென் அமெரிக்க நாடான வெனிசுலா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி, சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கும் பயனிகள் விரைவாக ஏர் டிக்கெட்டுகளை வாங்க அனுமதிக்கும் என அறிவித்துள்ளது.

இதுவொரு சர்வதேச விமான நிலையம் என்பதால் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். அத்துடன் Maiquetía சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்பு தலைவருடன் இணைந்து அதற்கான புதிய கட்டணங்களையும் வரையருக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Crypto Market – 24 மணி நேரத்தில் 13000% உயர்வு - டாப் லிஸ்டில் அமுன் பிட்காயின்
Maiquetía விமான நிலையத்தின் இயக்குநர் ஃப்ரெடி போர்கஸ் “டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்தி விமான நிலையத்தில் சர்வதேச தரங்களுடன் பின்பற்றி சரியான முறையில் கிரிப்டோக்களை உபயோகிக்கப்படும். ரஷ்யா, ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்த முடிவானது பயனளிக்கும்” என்று கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்