ஆப்நகரம்

Cryptocurrency: ஒரே நாளில் 1,00,000% உயர்வு - விண்ணைத் தொட்ட பிரின்ஸ் ஃப்ளோகி

24 மணி நேரத்தில் 100000% உயர்ந்த பிரின்ஸ் ஃப்ளோகி காயின்

Samayam Tamil 20 Oct 2021, 2:12 pm
கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர முன்னனி கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பானது 6.31 சதவிதம் ஏற்ற, இறக்கத்துடனே உள்ளன.
Samayam Tamil Prince Floki


கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் 2.40 சதவிதம், எதிரியம் 0.96 சதவிதம் மற்றும் டெதர் 0.05 சதவிதம் நேற்றைய தினத்தைக் காட்டிலும் சற்று உயர்ந்துள்ளன. பைனான்ஸ் மற்றும் கர்டானோ 2.54 சதவிதம் நேற்றைய தினத்தைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது.

கிரிப்டோவின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பானது 2.53 டிரில்லியன் டாலராக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவுன் மொத்த மதிப்பு 88.89 பில்லியனாக உள்ளது.

முதல் 5 இடங்களில் கிரிப்டோகரன்சி சந்தையில் முதன்மை வகிக்கும் காயின்கள் – கடந்த 24 மணி நேரக்கணக்கின்படி:

1.பிரின்ஸ் ஃப்ளோகி (PrinceFloki) – 0.001342 டாலர் (136461.44%)
2.ஸ்டிரைக் எக்ஸ் (StrikeX) – 0.1854 டாலர் (69935.46%)
3.டெத் டோக்கன் (Death Token) – 0.000004003 டாலர் (478.69%)
4.கிசிமோடோ இனு (Kishimoto Inu) - 0.00000000022 டாலர் (430.45%)
5.ஜெனாரோ நெட்வொர்க் (Genaro Network) – 0.06982 டாலர் (406%)

பிட்காயினில் மியூச்சுவல் ஃபண்ட்.. இதில் என்ன ஸ்பெஷல்?
கடைசி 5 இடங்களில் உள்ள கிரிப்டோகரன்சிகள் - கடந்த 24 மணி நேரக்கணக்கின்படி:

1.எஸ்என்எஃப்டி (SNFT) – 0.01008 டாலர் (97.53%)
2.யோ ராக்கெட் ($YO) – 0.00000008531டாலர் (90.22%)
3.பேபி ஷிபா (BHIBA) – 0.000002013 டாலர் (62.21%)
4.ஃபுரூட் ஃபைட்டர் (FOOFIGHT) – 0.0000001237 டாலர் (56%)
5.டோஜ்போங் (DOBO) – 0.000000003757 டாலர் (47.79%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோகயின்களின் சந்தை மதிப்பை பற்றி காண்போம். பிட்காயின், எதிரியம் மற்றும் டெதர் காயின்கள் நேற்றைய தினத்தை காட்டிலும் 2.29 சதவிதம் உயர்ந்தும், பைனான்ஸ் மற்றும் கர்டானோ 2.54 சதவிதம் குறைந்தும் காணப்படுகிறது.

1.பிட்காயின் (Bitcoin) – 63,710.07 டாலர் (2.05%)
2.எதிரியம் (Ethereum) - 3,844.18. டாலர் (0.46%)
3.கர்டானோ (Cardano) – 2.10 டாலர் (1.42%)
4.பைனாஸ் (Binance Coin) – 485.46டாலர் (1.67%)
5.டெதர் (Tether) – 1 டாலர் (0.09%)

அடுத்த செய்தி

டிரெண்டிங்