ஆப்நகரம்

ட்விட்டர் NFT ப்ரொஃபைல் பிக் சரியில்லை - எலான் மஸ்க் ஓபன் டாக்!

ட்விட்டர் அதன் NFT வடிவிலான ப்ரொஃபைல் பிக்சர் படத்தை வெளியிட்டுள்ளது, ஆனால் அவை எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Jan 2022, 2:50 pm
ட்விட்டர் சமீபத்தில் அதன் பயனர்களுக்காக NFT அம்சங்களை வெளியிடத் தொடங்கியது. ஆரம்பத்தில் iOS மூலம் ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) சந்தாதாரர்கள் தங்கள் ப்ரொஃபைல் பிக்கை NFTகளாக மாற்றி ட்விட்டரில் பயன்படுத்த அனுமதித்தது. ட்விட்டரில் வழக்கமான வட்ட வடிவ காட்சிப் படத்திலிருந்து சமீபத்திய ப்ரொஃபைல் பிக் சற்று வித்தியாசமானது. அது ஒரு அறுகோண வடிவம் கொண்டுள்ளது.
Samayam Tamil Elon musk


அதில் முக்கிய ட்விட்டர் ப்ளூ சந்தாதாரரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கிற்கு ட்விட்டரின் சமீபத்திய NFT வடிவிலான சுயவிவரப்படம் பிடிக்கவில்லை என்பதை அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டர் தனது புது முயற்சிகளை இப்படியான சாதாரண விஷயங்களுக்கு பயன்படுத்தி வீணடிப்பாதாகவும், ட்விட்டரின் புதிய அறுகோண வடிவிலான ப்ரொஃபைல் பிக் “எரிச்சலூட்டுவதாக” உள்ளது எனவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவரின் கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Cryptocurrency: டாப் லிஸ்ட்டில் பிமெயில் காயின் 750% உயர்வு!
ட்விட்டர் சில மாதங்களுக்கு முன் பயனர்கள் பிட்காயினை அனுப்பவும் பெறவும் அனுமதித்து. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு அதன் ட்விட்டர் ப்ளூ பயனாளர்கள் அவர்களின் சுய விவரப்படங்களை NFT வடிவில் உருவாக்கவும் அனுமத்தித்தது.

NFT என்பது பிளாக்செயின் எனப்படும் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்பட்ட தரவுகளின் அலகு ஆகும். இது கிரிப்டோகரன்சிக்கான அடிப்படை தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், NFTகள் முக்கியத்துவம் பெற்றன.

NFTகள், டிஜிட்டல் சொத்துக்களை தனித்தன்மையுடன் சரிபார்க்கப் பயன்படும் சான்றிதழ்களுடன் வருகின்றன. NFT டிஜிட்டல் சொத்துகளாக புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ கிளிப்புகள் மற்றும் பிற வகை டிஜிட்டல் ஃபைல்களை குறிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்