ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி: வங்கிகள் கம்முனு இருக்கனும்.. மத்திய வங்கி அட்வைஸ்!

கிரிப்டோ பரிவர்த்தனைகளில் வங்கிகள் நேரடியாக ஈடுபடக்கூடாது என மத்திய வங்கி அறிவுரை.

Samayam Tamil 9 Dec 2021, 4:14 pm
தாய்லாந்தின் மத்திய வங்கி அந்நாட்டின் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் கிரிப்டோ வர்த்தகத்தில் வங்கிகள் நேரடியாக ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil Thailand Central Bank


தாய்லாந்து மத்திய வங்கியின் (BoT) மூத்த இயக்குனரான சாயாவாடீ சாய் ஆனந்த், மக்கள் தங்களின் பணத்தை டெபாசிட் செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் தான் வங்கிகள் உள்ளன, ஆனால் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு, வணிக வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிகள் மூலம் ஈடுபடுவதை விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கிரிப்டோகரன்சி நிலையற்ற தன்மையைக் கொண்டது. சந்தை அபாயங்கள் அதிகம் உள்ள கிரிப்டோவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமே வர்த்தகம் செய்யப்படுவதால் அதில் வங்கிகளின் பங்குகளும் உண்டு. ஆனால் நேரடியாக வங்கிகள் ஈடுபடாமல் கிரிப்டோவிற்கு உள்ள பிரத்யேக தனியார் வர்த்தக நிறுவனங்களின் வர்த்த தளங்களின் மூலம் செய்தால் வங்கி கணக்குகளில் குளறுபடிகள் இல்லாமல் இருக்கும், வாடிக்கையாளர்களின் தரவுகளும் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

களத்தில் இறங்கிய விசா – கிரிப்டோ பரிவர்த்தனையில் புதிய வசதிகள்!
அதேசமயம் கடந்த ஆகஸ்ட் மாதம் Zipmex கிரிப்டோ வர்த்தக தளம், தாய்லாந்தின் ஐந்தாவது பெரிய கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆஃப் அயுத்யாவிடமிருந்து (Bank of Ayudhya)1.3 மில்லியன் டாலர் (ரூ.9,811 கோடி) நிதியுதவி பெற்றுள்ளது.

அதேபோல நவம்பர் மாதம் பேங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட பிட்குப்(Bitkub) கிரிப்டோ வர்த்தக தளம், தாய்லாந்தின் மிகப் பழமையான வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியின் (Siam Commercial Bank – SCB) பெரும்பான்மையான 51 சதவீத பங்குகளை பிட்குப் கிரிப்டோ வர்த்தக நிறுவனம் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் வளர்ந்துவரும் நிலையின் அந்நாட்டு மத்திய வங்கி இயக்குநரின் கருத்துக்கள் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்