ஆப்நகரம்

அந்த பிட்காயின் என்னாச்சு? ”நோ ஐடியா” - கைவிரித்த நிர்மலா சீதாராமன்!

பிட்காயினை இந்தியாவில் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிப்பதில் அரசுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Nov 2021, 3:46 pm
சமீப காலமாக பிட்காயின் பரிவர்த்தனைகள் மிக ரகசியமாக மிக வேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவது மத்திய அரசுக்குத் தெரியா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ”இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனைகள் குறித்து எந்தவொரு தரவுகளையும் அரசு சேகரிக்கவில்லை. இந்தியாவில் பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்கும் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Samayam Tamil bitcoin


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 'கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் 2021' குறித்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதில் குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து அதைத் தவிர்த்த அனைத்து கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யவே முயல்கிறது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதான் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் பிளாக் ஃபார்ம் கிளப் காயின்!
இன்று திங்கட்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னணி கிரிப்டோ கரன்சியில் ஒன்றான பிட்காயினை மத்திய அரசு ஏற்காது எனக் கூறியிருப்பது கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்