ஆப்நகரம்

கிரிப்டோ மோசடி.. 2 கோடி அபராதம் மற்றும் ஜெயில்.. திடீர் அறிவிப்பு!

கிரிப்டோ மோசடிகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு.

Samayam Tamil 28 Dec 2021, 6:21 pm
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil crypto fraud


டிசம்பர் மாத தொடக்கத்தில் துபாய் உலக வர்த்தக மையம் கிரிப்டோகரன்சிக்கென தனி பொருளாதார அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தது. மேலும் கிரிப்டோகரன்சிக்கென தனி சட்ட விதிகள் உருவாக்கப்படும் எனவும், உலகளாவிய கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறியிருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகளில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனைகளை இயற்றியுள்ளது. அதன்படி கிரிப்டோ மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருட சிறை தண்டனை மற்றும் 1 மில்லியன் AED (இந்திய மதிப்பில் தோரயமாக ருபாய் 2 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சி லேட்டஸ்ட்.. 1500% உயர்ந்த ஃபார்ம் கேப்பிடல் காயின்!
இந்த சட்டம் வரும் ஜனவரி 2022 முதல் அந்த நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கூறியுள்ளார். இந்த கிரிப்டோ சீர்திருத்த சட்டங்களை உருவாக்குவதில் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கடந்த மாதம் முதலே ஈடுப்பட்டு வந்துள்ளார்.மேலும் இந்த கடுமையான சட்டங்களின் மூலம் நிதி மோசடி அபாயங்களைக் குறைக்க முடியும் எனவும் சயீத் அல் நஹ்யான் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்