ஆப்நகரம்

Gold Rate: தங்கம் விலை இன்று உயர்வு!

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,077 ரூபாய்க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 39.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Samayam Tamil 6 Jun 2019, 10:17 am
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,077 ரூபாய்க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 39.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold


சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 24,608 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை!
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,077 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,355 ஆகவும், சவரனுக்கு ரூ.26,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 காசுகள் குறைந்து 39.45 காசுகளுக்கும், கிலோ ரூ.39,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்