ஆப்நகரம்

Gold Rate: அடடே... தங்கம் விலை குறைஞ்சிருக்கே!

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Samayam Tamil 12 May 2021, 11:33 am
தமிழகத்தில் மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும் தங்கத்தின் விலை நிலவரத்தைத் தெரிந்துகொண்டால் அடுத்து நகை வாங்க வசதியாக இருக்கும். அதன்படி, இன்றைய விலை நிலவரம் என்ன என்று இங்கே காண்போம்.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 12th may 2021
Gold Rate: அடடே... தங்கம் விலை குறைஞ்சிருக்கே!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (மே 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,520 ரூபாயாக இருந்தது.

அதேபோல, நேற்று 36,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 160 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,879லிருந்து இன்று ரூ.4,859 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் 38,032 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 160 ரூபாய் குறைந்து 38,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,472 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,450 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,450 ஆகவும், கேரளாவில் ரூ.4,478 ஆகவும், டெல்லியில் ரூ.4,590 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,580 ஆகவும், ஒசூரில் ரூ.4,464 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,463 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.76 ஆக இருந்தது. இன்று அது ரூ.75.90 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 75,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்