ஆப்நகரம்

Gold rate today: இன்னைக்கு விலை எப்படி இருக்கு?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Samayam Tamil 12 Oct 2020, 5:54 pm
சென்னையில் இன்று தங்கம் விலை 48 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது. துவக்கத்தில் விலை உயர்வு காணப்பட்டாலும் இறுதி நாட்களில் விலைச் சரிவு இருந்தது. ஆனால் இந்த அக்டோபர் மாதத்தில் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 12th october 2020
Gold rate today: இன்னைக்கு விலை எப்படி இருக்கு?


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (அக்டோபர் 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,887 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,881 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 39,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 48 ரூபாய் உயர்ந்து 39,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,125லிருந்து இன்று ரூ.5,131 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 41,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 48 ரூபாய் உயர்ந்து 41,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,955 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,811 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,882 ஆகவும், கேரளாவில் ரூ.4,725 ஆகவும், டெல்லியில் ரூ.4,961 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,030 ஆகவும், ஒசூரில் ரூ.4,885 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,882 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.66.70லிருந்து இன்று ரூ.66.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்