ஆப்நகரம்

தங்கம் விலை: இன்னைக்கு எப்படினு பாருங்க..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 208 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று விலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 12:15 pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 208 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று விலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 13th february 2020
தங்கம் விலை: இன்னைக்கு எப்படினு பாருங்க..!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 26ப்ரூபாய் உயர்ந்து 3,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,862 ஆக இருந்தது.

அதேபோல, நேற்று 30,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 31,104 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து, ரூ.4,082க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.4,055 ஆக இருந்தது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 32,440 ரூபாயிலிருந்து இன்று 32,656 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலை 216 ரூபாய் உயர்ந்தப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,971 ஆகவும், டெல்லியில் ரூ.3,957 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,987 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,869 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,807 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,871 ஆகவும், ஒசூரில் ரூ.3,867 ஆகவும், கேரளாவில் ரூ.3,777 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

தங்கம் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளி விலையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,600 ஆகவும் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்