ஆப்நகரம்

தங்கம் விலை: இனி நகை வாங்குறது ரெம்ப கஷ்டம்!

இன்றைய தங்கம் விலை இதுதான்...

Samayam Tamil 14 Feb 2021, 10:51 am
கடந்த சில நாட்களாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த தங்கம் விலை, இரண்டாம் வாரத்தில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நேற்றும் விலையேற்றம் காணப்பட்டது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 14th february 2021
தங்கம் விலை: இனி நகை வாங்குறது ரெம்ப கஷ்டம்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (பிப்ரவரி 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,468 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,466 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 35,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 16 ரூபாய் உயர்ந்து 35,744 ரூபாய்க்கு விற்பனையானது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்றைய முன்தினம் ரூ.4,8,50லிருந்து நேற்று ரூ.4,852 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கம் 38,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 38,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,644 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,425 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,425 ஆகவும், கேரளாவில் ரூ.4,455 ஆகவும், டெல்லியில் ரூ.4,640 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,714 ஆகவும், ஒசூரில் ரூ.4,485 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,490 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றைய முன்தினம் ரூ.73.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.73.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 73,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்