ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று (ஏப்ரல் 22) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,488 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.4,469 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 19 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 35,752 ரூபாயிலிருந்து இன்று 35,904 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்துள்ளது.
தூய தங்கத்தின் விலை!
24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து, ரூ.4,606க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் இதன் விலை 4,677 ரூபாயாக இருந்தது.
8 கிராம் தூய தங்கத்தின் விலை 37,416 ரூபாயிலிருந்து இன்று 37,568 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய விலையை விட 152 ரூபாய் அதிகமாகும்.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,212 ஆகவும், டெல்லியில் ரூ.4,189 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,085 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,043 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,969 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,425 ஆகவும், ஒசூரில் ரூ.4,425 ஆகவும், கேரளாவில் ரூ.4,322 ஆகவும் இருக்கிறது.
வெள்ளியின் விலை!
வெள்ளி விலை இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை சென்னையில் நேற்று ரூ.42.27லிருந்து இன்று ரூ.42.71 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 42,710 ரூபாயாக உள்ளது.