ஆப்நகரம்

தங்கம் விலை: நகை வாங்குவோர் வயிற்றில் புளியைக் கரைக்கும் தங்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Samayam Tamil 22 Oct 2020, 6:41 pm
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை உயர்ந்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தில் தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது. நேற்றைய முன்தினம் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்தது. ஆனால் நேற்று மீண்டும் விலையேற்றம் தொடங்கி இன்றும் நீடிக்கிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 22nd october 2020
தங்கம் விலை: நகை வாங்குவோர் வயிற்றில் புளியைக் கரைக்கும் தங்கம்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (அக்டோபர் 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,720 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,717 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 24 ரூபாய் உயர்ந்து 37,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,094லிருந்து இன்று ரூ.5,098 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 40,752 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 32 ரூபாய் உயர்ந்து 40,784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,971 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,706 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,706 ஆகவும், கேரளாவில் ரூ.4,673 ஆகவும், டெல்லியில் ரூ.5,000 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,006 ஆகவும், ஒசூரில் ரூ.4,710 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,709 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

தங்கம் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளி விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.67.60லிருந்து இன்று ரூ.67.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்