ஆப்நகரம்

Gold Rate Chennai: என்ன ஆச்சு இன்னைக்கி? ஏறவும் இல்ல, இறங்கவும் இல்ல!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்...

Samayam Tamil 23 Jun 2020, 1:31 pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36,880 ஆக உள்ளது.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 23rd june 2020
Gold Rate Chennai: என்ன ஆச்சு இன்னைக்கி? ஏறவும் இல்ல, இறங்கவும் இல்ல!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூன் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,610 ஆக உள்ளது. நேற்று காலையில் இதன் விலை 4,629 ஆக இருந்தது. பின்னர் மாலையில் 4,610 ஆகக் குறைந்தது.

அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையான ரூ.36,880லேயே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,841 ஆக உள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று விற்பனையான ரூ.38,728 விலையிலேயே இன்றும் விற்பனையாகிறது. இன்று மாலையில் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,661 ஆகவும், டெல்லியில் ரூ.4,701 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,751 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,630 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,564 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,632 ஆகவும், ஒசூரில் ரூ.4,635 ஆகவும், கேரளாவில் ரூ.4,430 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

தங்கம் விலையில் மாற்றம் இல்லாவிட்டாலும் வெள்ளி விலை இன்று மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.54.20 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.53.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 53,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்