ஆப்நகரம்

தங்கம் விலை: கூடிருக்கா குறைஞ்சிருக்கா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று விலை குறைந்திருக்கிறது. இருந்தாலும் கொரோனா பீதியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், தங்கம் விலை குறைந்தும் பயனில்லை போலவே தெரிகிறது.

Samayam Tamil 23 Mar 2020, 11:34 am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று விலை குறைந்திருக்கிறது. இருந்தாலும் கொரோனா பீதியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், தங்கம் விலை குறைந்தும் பயனில்லை போலவே தெரிகிறது.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 23rd march 2020
தங்கம் விலை: கூடிருக்கா குறைஞ்சிருக்கா?


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (மார்ச் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,961 ஆக உள்ளது. நேற்று 3,966 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 31,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 31,688 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ரூ.4,159 ஆக உள்ளது. நேற்று 4,164 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 33,312 ரூபாயிலிருந்து இன்று 33,272 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,965 ஆகவும், டெல்லியில் ரூ.3,996 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,018 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,970 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,864 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,973 ஆகவும், ஒசூரில் ரூ.3,968 ஆகவும், கேரளாவில் ரூ.3,776 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

தங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 40.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.40.70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.40,700 ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்