ஆப்நகரம்

Gold rate: நகை வாங்கப் போறீங்களா? கடன்தான் வாங்கணும்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 26 Sep 2021, 11:15 am
இன்று ஞாயிற்றுக் கிழமை. நிறையப் பேர் நகை வாங்கக் கடைக்குச் செல்வார்கள். நகை வாங்குவதற்கு முன்பாக விலை என்ன என்று பார்த்துவிட்டுச் செல்லலாம். கடந்த சில நாட்களாகவே சென்னையில் தங்கம் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. விலையேற்றத்தால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 26th september 2021
Gold rate: நகை வாங்கப் போறீங்களா? கடன்தான் வாங்கணும்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,364 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,362 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 34,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் உயர்ந்து 34,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் நேற்று உயர்த்தப்பட்டிருந்தது. நேற்றைய முன்தினம் 4,726 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் 4,728 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 37,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 16 ரூபாய் உயர்ந்து 37,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,524 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,324 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,590 ஆகவும், ஒசூரில் ரூ.4,363 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,359 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலை நேற்று குறைக்கப்பட்டிருந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றைய முன்தினம் ரூ.64.90 ஆக இருந்தது. நேற்று அது ரூ.64.10 ஆகக் குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி 64,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்