ஆப்நகரம்

தங்கம் விலை: தொடர் சரிவில் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பீதியால் ஏப்ரல் 14 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனையும் முடங்கியுள்ள நிலையில் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விலை குறைந்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 12:18 pm

Samayam Tamil 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 31st march 2020
தங்கம் விலை: தொடர் சரிவில் தங்கம்!

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (மார்ச் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,200 ஆக உள்ளது. நேற்று 4,219 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 33,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 152 ரூபாய் குறைந்து 33,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,391 ரூபாயாக உள்ளது. நேற்று 4,399 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 35,192 ரூபாயிலிருந்து இன்று 35,128 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தின் விலையும் 64 ரூபாய் குறைந்துள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,967 ஆகவும், டெல்லியில் ரூ.4,057 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,067 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,958 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,863 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,954 ஆகவும், ஒசூரில் ரூ.3,956 ஆகவும், கேரளாவில் ரூ.3,781 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஏழாவது நாளாக வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 41,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்