ஆப்நகரம்

Gold rate: தங்கம் விலை தடாலடி குறைவு.. நகையை அள்ளிப் போட்டு வாங்க!

டிசம்பர் 6 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Dec 2022, 10:39 am
கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. இதனால், நகை வாங்குவோர் என்ன செய்வதென புரியாமல் குழப்பமடைந்தனர். இந்நிலையில், இன்று (டிசம்பர் 6) தங்கம் விலை சூப்பராக குறைந்துவிட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலையோ கிலோவுக்கு 1700 ரூபாய் குறைந்துள்ளது.
Samayam Tamil 22k 24k gold silver price today in chennai tamilnadu on december 6th 2022 check rates
Gold rate: தங்கம் விலை தடாலடி குறைவு.. நகையை அள்ளிப் போட்டு வாங்க!


​ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூயத் தங்கம்

ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5412 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 43296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 70.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 70800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்