ஆப்நகரம்

Gold Rate Today: உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ரேட் ரொம்ப கம்மி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 28 Feb 2021, 11:11 am
அண்மைக்காலமாக தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பிப்ரவரி 25ஆம் தேதி தங்கம் விலை திடீரென கடுமையாக உயர்ந்தது. அடுத்த நாளே சற்று விலை குறைந்தது. நேற்று முதல் தங்கம் விலை சூப்பராக குறைந்துவிட்டது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu on feb 28th 2021 check rates here
Gold Rate Today: உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ரேட் ரொம்ப கம்மி!


​ஆபரணத் தங்கம்

தமிழகத்தில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 34648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4363 ரூபாயாகவும், ஒரு சவரன் விலை 34904 ரூபாயாகவும் இருந்தது.

​தூய தங்கம்

ஒரு கிராம் தூய தங்கம் 4715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 37720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன் ஒரு கிராம் தூய தங்கம் 4747 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி 72.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்