ஆப்நகரம்

Gold Rate Today: நகை கடைக்கு கெளம்புங்க.. ரேட் ரொம்ப கம்மி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

Samayam Tamil 26 Mar 2021, 11:36 am
அண்மைக்காலமாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 23ஆம் தேதி திடீரென தங்கம் விலை லேசாக உயரத் தொடங்கியது. பின்னர் மார்ச் 24ஆம் தேதி முதல் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்படி, இன்றும் தங்கம் விலை சூப்பராக குறைந்துவிட்டது. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் இதோ.
Samayam Tamil 22k 24k gold silver rate today in chennai tamilnadu on march 26th 2021 check price here
Gold Rate Today: நகை கடைக்கு கெளம்புங்க.. ரேட் ரொம்ப கம்மி!


ஆபரணத் தங்கம்

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 33728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4230 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

​தூய தங்கம்

இன்று ஒரு கிராம் தூய தங்கம் 4607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 36856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4621 ரூபாயாக இருந்தது. இன்று விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்தான்.

​வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 69.50 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 69500 ரூபாயாக இருக்கிறது. நேற்று முன் தினம் (மார்ச் 24) ஒரு கிராம் வெள்ளி விலை 70 ரூபாயாக இருந்தது. நேற்று முதல் விலை குறைந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்