ஆப்நகரம்

தங்கம் வாங்க.. இன்று நல்ல நாள் அல்ல.. ஓவர் நைட்டில் பவுனுக்கு ரூ.280 உயர்வு.. அதிர்ச்சியில் பெண்கள்!

இரண்டு நாள் தொடர் சரிவிற்குப்பின் தங்கம் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. ஆனால் வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்கள் குறித்து இங்குக் காணலாம்.

Samayam Tamil 10 Mar 2023, 12:19 pm
இன்று தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மார்ச் 10 இன்று தங்கம் விலையில் ஒரு பவுனுக்கு ரூ. 280 ஆக விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil Gold and silver price


ஆபரணத் தங்கம் விலை!

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 41,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூயத் தங்கத்தின் விலை!

அதேபோல ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) நேற்றைய விலையைவிட கிராமிற்கு ரூ.35 உயர்ந்து 5,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 44,416.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. மார்ச் 10 அன்று ஒரு கிராம் வெள்ளி 67.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்