ஆப்நகரம்

Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. நகை வாங்குவோர் மகிழ்ச்சி!

Gold Silver Rate Today in chennai 7 July 2022: தங்கம் விலை இன்றும் 500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு.

Samayam Tamil 7 Jul 2022, 10:17 am
நகை வாங்குவோருக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக நல்ல செய்தி வந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அடுத்து விலை உயருவதற்குள் நகை வாங்கினால் நல்லது.
Samayam Tamil chance to buy gold jewellery at very cheap rate at chennai tamil nadu
Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. நகை வாங்குவோர் மகிழ்ச்சி!


ஆபரண தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூலை 7) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,672 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,740 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 544 ரூபாய் குறைந்து 37,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,142 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,074 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 41,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 544 ரூபாய் குறைந்து 40,592 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,760 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,763 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,760 ஆகவும், கேரளாவில் ரூ.4,756 ஆகவும், டெல்லியில் ரூ.4,760 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,760 ஆகவும், ஒசூரில் ரூ.4,746 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,747 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 62.50 ரூபாயாக இருந்தது. இன்று அது ரூ.62.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 62,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்