ஆப்நகரம்

தங்கம் விலை: இன்னைக்கு நகை வாங்கலாமா, வேணாமா?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Samayam Tamil 25 Jul 2021, 10:58 am
சமீப காலமாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படவே இல்லை. இந்நிலையில் சற்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை நேற்று சிறிதளவு குறைக்கப்பட்டது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil check latest gold and silver price at chennai and other cities 25th july 2021
தங்கம் விலை: இன்னைக்கு நகை வாங்கலாமா, வேணாமா?


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூலை 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,510 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,510 ரூபாயாக இருந்தது. அதேபோல, வெள்ளிக் கிழமை 36,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் குறைந்து 36,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய முன்தினம் 4,875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,874 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்றைய முன்தினம் 39,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 8 ரூபாய் குறைந்து 38,992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,688 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,470 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,470 ஆகவும், கேரளாவில் ரூ.4,473 ஆகவும், டெல்லியில் ரூ.4,678 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,715 ஆகவும், ஒசூரில் ரூ.4,508 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,507 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை வெள்ளிக் கிழமை ரூ.72.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.72 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்